உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேச்சுவார்த்தையை புறக்கணித்த கோயில் நிர்வாகம்

பேச்சுவார்த்தையை புறக்கணித்த கோயில் நிர்வாகம்

பழநி: பழநி கிரிவீதியில் அனுமதி இன்றி மதில் சுவரை இடித்தது தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தையில் கோயில் நிர்வாகம் கலந்து கொள்ளாது புறக்கணித்தது.பழநி கிரிவீதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் முன்பு இருந்த மதில் சுவரை கோயில் நிர்வாகம் இடிக்க அதை நகராட்சி கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர். இது குறித்த அமைதி பேச்சுவார்த்தைக்கு நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, போலீசார், கோயில் நிர்வாகத்தினருக்கு அழைப்பு விடுத்தது. நேற்று மாலை 5:00மணிக்கு பேச்சுவார்த்தை தாசில்தார் பிரசன்னா தலைமையில் துவங்கிய நிலையில் வருவாய் துறையினர், போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். கோயில் சார்பில் எந்த அதிகாரியும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையிலான கவுன்சிலர்கள், அதிகாரிகள், எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை