மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது
15-Aug-2024
கொடைக்கானல்: கொடைக்கானல் பழம்புத்துாரில் நிலத்தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டதில் மூவர் கைது செய்யப்பட்டனர்.பழம்புத்துாரை சேர்ந்த பழனிச்சாமி, முத்தையா இருவர் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் முத்தையா பழனிச்சாமியை தாக்கனார். இதை தொடர்ந்து பழனிச்சாமி மகன் பாண்டி 30, முத்தையா மகன் ராமு 23, இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வேனில் சென்ற பாண்டி தரப்பினர் ராமு சென்ற டூவீலரில் மோதினர். ராமு கீழே விழுந்த நிலையில் தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்து தோட்ட பகுதியில் வீசி சென்றனர். கொடைக்கானல் போலீசார் பாண்டி 30, பழனிச்சாமி 60, சிவா 23, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கிஷோர் 23, கருப்பணன் 32, ஜெயக்குமார் ஆகியோரை தேடுகின்றனர்.
15-Aug-2024