உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

15 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல், ஜூலை 5 மாவட்ட வருவாய்த்துறையில் 15 தாசில்தார்களை பணியிட மாற்றம், நியமனம் செய்து கலெக்டர் துர்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி அகதிகள் நலன் கலெக்டர் அலுவலகம் டேனியல்பிரேம்குமார் நத்தத்திற்கும், நத்தம் பாண்டியராஜ் ஆதிதிராவிடர் நலன் திண்டுக்கல்லிற்கும், ஆதிதிராவிடர் நலன் திண்டுக்கல் சுரேஷ்குமார் ஆத்துாருக்கும், ஆத்துார் முத்துமுருகன் முத்திரைத்தாள் பழநிக்கும், முத்திரைத்தாள் பழநி ருக்குமணி நிலம் எடுப்பு திண்டுக்கல்லிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். கிட்டங்கி மேலாளர் டாஸ்மாக் திண்டுக்கல் சண்முகம் ஒட்டன்சத்திரத்திற்கும், ஒட்டன்சத்திரம் சஞ்சய்காந்தி குடிமைப்பொருள் பழநிக்கும், குடிமைப்பொருள் பழநி ராமசாமி நிலக்கோட்டைக்கும், நிலக்கோட்டை ஜெயபிரகாஷ் கிட்டங்கி மேலாளர் டாஸ்மாக் திண்டுக்கல்லிற்கும், குஜிலியம்பாறை கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் மேற்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். திண்டுக்கல் மேற்கு சுல்தான்சிக்கந்தர் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகத்திற்கும், அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம் மணிமொழி அகதிகள் நலன் திண்டுக்கல்லிற்கும், ஆதிதிராவிடர் நலன் நிலக்கோட்டை ஜெயராஜன் நேர்முக உதவியாளர் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொடைக்கானலுக்கும், நேர்முக உதவியாளர் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொடைக்கானல் சரவணக்குமார் ஆதிதிராவிடர் நலன் நிலக்கோட்டைக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் குஜிலியம்பாறை ஜான்பாஸ்டின்டல்லஸ் குஜிலியம்பாறை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை