உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாக்காளர்களை அழைத்து வர தனி டீம்; அரசியல் கட்சிகள் திட்டம்

வாக்காளர்களை அழைத்து வர தனி டீம்; அரசியல் கட்சிகள் திட்டம்

திண்டுக்கல்: ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள முதல் வரிசைகளை எடுத்துக் கூறி ஓட்டுப்போட வாக்காளர்களை அழைத்து வர 'தனி டீம்'- -ஐ அரசியல் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.முன்பெல்லாம் தேர்தல் வந்துவிட்டால் வீடு, பொது இடங்களில் உள்ள சுவர்கள் வண்ணமயமாக மாறி விடும். திரும்பிய பக்கம் எல்லாம் ஒவ்வொரு கட்சியும் ஓவியங்களாகவும், போஸ்டர்களாகவும் மாறுவதோடு மக்களிடம் பணிவாக ஓட்டளிக்கச் சொல்வர்.ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. வேட்பாளரின் மனநிலையை புரிந்து கொண்ட கட்சியினர் பலர் பணம் கொடுத்தால் மட்டுமே தேர்தல் வேலை செய்வோம் என கறாராக நின்று விடுகின்றனர். குறிப்பாக கிராமங்களிலோ தேர்தல் பணிகள் பரிதாப நிலையில் தான் உள்ளது. திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரையில் பிரதான கட்சிகள் அனைத்துமே தங்களில் கூட்டணிக்கு தொகுதிக்கு விட்டுக் கொடுத்து விட்டனர். இதனால் சின்னத்தை பதிய வைக்க பெரும்பாடு பட வேண்டியதாக இருக்கிறது.எப்படியும் ஓட்டுப்பதிவு இயந்திரங்ளில் முதல் 3 முதல் 5 வரிசைகளில் பிரதான கட்சி சின்னங்களே இருக்கும். அதை வைத்து ஓட்டு வாங்கிடலாம் என திட்டமிட்டுள்ளனர். இதற்காக கிராமங்களில் வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வருதற்காகவே தனி 'டீம்' தயார்படுத்தப்பட்டுள்ளது.அந்த டீம் , எந்த பட்டனை அழுத்தணும் என வாக்காளர்களிடம் சொல்லி அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பணம் பட்டுவாடா செய்துள்ளதால் வாக்காளர்கள் அன்பு கட்டளையை ஏற்பர் என்ற நம்பிக்கையில் கட்சியினர் வலம் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ