மேலும் செய்திகள்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு
12-Aug-2024
சின்னாளபட்டி, : காசநோய் ஒழிப்பு தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் காசநோயாளிகளுக்கு வீடுதேடி ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.சின்னாளபட்டி வட்டார சுகாதார நிலைய டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். 'சி' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி, ஆத்துார் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன், காசநோய் பிரிவு சுகாதார பார்வையாளர் மரியமெலினா முன்னிலை வகித்தனர். 15க்கு மேற்பட்ட தொற்றாளர்களுக்கு இக்குழுவின் சார்பில் வீடுதேடி ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் வழங்கினர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோயாளிகளுக்கு சுண்டல், பாசிப்பயறு, முட்டை, வரகரிசி, நெல்லிக்காய், நிலக்கடலை, பருப்பு கொண்ட ஊட்டச்சத்து பொருட்களும், நீர்க்கோவை மாத்திரை, வேம்பு குளியல் சோப் போன்ற தன்சுத்த பெட்டகம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
12-Aug-2024