காதலன் கொலை: தந்தை கைது
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே காதல் விவகாரத்தில் மகளின் காதலனை வெட்டி கொலை செய்ய தந்தையை போலீசார் கைது செய்தனர்.குன்னுவரன்கோட்டையை சேர்ந்தவர் கபிலன் 24. சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றினார். இவர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகளை காதலித்தார். கபிலன் காதலித்த பெண் தங்கை உறவு முறை என்பதால் மணிகண்டன் கண்டித்துள்ளார். கபிலன் காதலை கைவிட மறுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற கபிலனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் மணிகண்டன் கபிலனை அரிவாளால் வெட்டினார்.விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கபிலன் இறந்தார்.விருவீடு போலீசார் மணிகண்டனை 46, கைது செய்தனர். அவருக்கு துணையாக இருந்த பொன்ராம், பொன்னையா ஆகியோரையும் தேடி வருகின்றனர்.