முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திண்டுக்கல்: தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி திண்டுக்கல் மாநகர தி.மு.க., சார்பில் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. உறுதிமொழி எடுக்கப்பட்டது. துணை செயலாளர்கள் காமாட்சி, பிலால், மார்கிரேட் மேரி, நாகராஜன், சத்தியமூர்த்தி, மேயர் இளமதி முன்னிலை வகித்தனர். மாநகர பொருளாளர் சரவணன், துணை செயலாளர் அழகர்சாமி, மண்டல தலைவர்கள் ஜான் பீட்டர், ஆனந்த், பகுதி செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டனர்.மாவட்ட நீதிமன்றத்திலும் இனிப்பு வழங்கப்பட்டது.மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், மூர்த்தி, அரசு வழக்கறிஞர் ஜோதி, ஹரிகரன், சந்திரசேகர், மதுசூதனன் கலந்து கொண்டனர்.வடமதுரை : வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிலாத்து , ஆண்டிப்பட்டி, பெத்தப்பட்டி, கம்பிளியம்பட்டி, வாலிசெட்டிபட்டி அங்கன்வாடி மையங்களுக்கு கடிகாரம், குடிநீர் கேன் உள்ளிட்ட உபகரணங்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படடது. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். துணை செயலாளர் ஆனந்திஅறிவுக்கண்ணன், பொருளாளர் செந்தில்முருகன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராமசாமி, சந்திரசேகர், அன்பழகன், சிவா, கார்த்திக், சாமிநாதன் பங்கேற்றனர். வடமதுரையில் நகர செயலாளர் கணேசன், நகர துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை முரளிராஜன் பங்கேற்றனர்.சின்னாளபட்டியில் தி.மு.க., சார்பில் அசைவ விருந்து நடந்தது. நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகேசன், கட்சி கொடி ஏற்றினார். பேரூராட்சி தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி பங்கேற்றனர்.வேடசந்துாரில் தெற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் நாகம்பட்டி உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் பணி புரியும் துாய்மை பணியாளர்களுக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் வேட்டி சேலைகள், அன்னதானம் வழங்கினார். நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் கவிதா முருகன், சரவணன், பாலு, திருமுருகன் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை விகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர். மக்களுக்கு இனிப்பு, காலை உணவு வழங்கப்பட்டது. தி.மு.க., மத்திய ஒன்றியம் சார்பில் தங்கச்சியம்மாபட்டியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவவாக்கியம் ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், சக்தி கலந்து கொண்டனர்.கள்ளிமந்தையத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் பி.சி.தங்கம், முன்னாள் ஊராட்சிதலைவர்கள் கணேசன் குப்புசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு உள்ள மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் , உடைகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகர செயலாளர் வேலுமணி, மண்டல திட்ட குழு உறுப்பினர் காளீஸ்வரி பாஸ்கரன் கலந்து கொ திண்டுக்கல் சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பில் அரசு தலைமை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார்.ஒன்றிய செயலர் வெள்ளிமலை, மேயர் இளமதி, மாநகர பொருளாளர் சரவணன், பகுதி செயலர் பஜ்ரூல்ஹக், கவுன்சிலர்கள் அருள்வாணி, தெரசாமேரி, விமலாமேரி, பானுப்பிரியா, மண்டல தலைவர்கள் ஜான் பீட்டர், ஆனந்த் கலந்து கொண்டனர். இதுவரை 18 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது. இரவு 12 மணி வரை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ண்டனர்.நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நகர செயலாளர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, வழக்கறிஞர் பதுருஸ்ஸமான், வழக்கறிஞர் அணி சுந்தரமூர்த்தி, இளைஞரணி இப்ரில் ஆசித், மாணவரணி சிவா, சுற்றுச்சூழல் அணி ராஜகோபால் கலந்து கொண்டனர். நத்தம் நீதிமன்ற த்தில் வழக்கறிஞர் அணி சார்பில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் இனிப்புகள் வழங்கப்பட்டது.