முடங்கிய நுாலகங்கள்: பாழாகும் கட்டடங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர், கிராமங்கள் ேதாறும் நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டு ரூ. பல கோடி செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட போது முறையாக செயல்பட்ட நுாலகங்கள் அதன் பின் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு மூடப்பட்டன. நாளடைவில் ஆங்காங்கு பூட்டப்பட்டு கிடக்கின்றன. இது தற்போது பொழுது போக்கர்களுக்கு ஓய்வு கூடமாக மாறி விட்டன. கட்டடங்களும் வீணாகின்றன. இதை கருதி நுாலகங்களை முறையாக திறக்க நடவடிக்கை அவசியமாகிறது.