உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

திண்டுக்கல், : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் திண்டுக்கல்லிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் பஸ் ஸ்டாண்டில் அதிகளவில் இருந்தது.பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் திண்டுக்கல்லிருந்து வெளி மாவட்டங்களான மதுரை, திருச்சி, கன்னியாகுமரி,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷனில் ம்ககள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பஸ்களில் உட்கார எல்லா பயணிகளுக்கும் இடம் கிடைக்காததால் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். கூடுதல் பஸ்கள் இந்த நேரத்தில் இயக்கப்படாததால் நீண்ட நேரம் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ