வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
ஒட்டன்சத்திரம், ஜூலை 22- ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமணன் ஆய்வு செய்தார். அதன்படி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், அம்மா உணவகம், சின்னகுளம், உரக்கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை ஆலோசனைகள் வழங்கினார். மண்டல பொறியாளர் சீனிவாசன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணியபிரபு, மேலாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் விஜயபால்ராஜ் உடன் இருந்தனர்.