உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சி

மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சி

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றத்துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை ,சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சி திண்டுக்கல்லில் நடந்தது.டட்லி பள்ளியில் நடந்த இதில் அரசு ,அரசு உதவி பெறும் என 60 பள்ளிகளை சேர்ந்த 90 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராதிகா, பசுமை நிர்வாகி கார்த்திகா, ஓய்வு வன அலுவலர் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டவர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரிகரசுதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ