மேலும் செய்திகள்
பா.ம.க., செயற்குழு கூட்டம்
16-Feb-2025
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரத்தில் மத்திய ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் சக்கரபாணி ஆலோசனைப்படி நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், சிவபாக்கியம், மாவட்ட பிரதிநிதி சண்முகம் கலந்து கொண்டனர். மார்ச் 1 ல் கட்சித் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஊராட்சி வாரியாக ஓட்டு சாவடி முகவர்கள், குழு உறுப்பினர்கள் ,கிளை நிர்வாகிகளுக்கு தொடர் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16-Feb-2025