போதை மறுவாழ்வு மையம் திறப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கலெக்டர் சரவணன், எஸ்.பி.,பிரதீப், எம்.பி.,சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரி, நலப்பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன், மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார்,தி.மு.க.,ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.