மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
10 minutes ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
10 minutes ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
12 minutes ago
கொடைக்கானல் : கொடைக்கானல் நகரில் உலாவும் காட்டுமாடுகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் நடமாடும் நிலை அதிகரித்து வருகிறது. குறிஞ்சியாண்டவர் கோயில், செட்டியார் பூங்கா, சிவனடி ரோடு,பார்ன்கில் ரோடு, பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை , செவன் ரோடு, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், குறிஞ்சி நகர் ரோடுகளில் சர்வ சாதாரணமாக காட்டுமாடுகள் உலாவும் நிலை உள்ளது. பெயரளவிற்கு வனத்துறையினர் காட்டுமாடுகளை கண்காணிப்பதற்கு குழு அமைத்தும் பயனில்லை. நகரை சுற்றிய வனப் பகுதிகளில் போதுமான பசுந்தீவனங்கள் இல்லாத நிலையில் இவை நகரில் உள்ள புல்வெளியை தேடி வருகின்றன. சில வாரங்களுக்கு முன் கொடைக்கானல் வார சந்தையில் புகுந்த காட்டுமாடு தாக்கி ஓய்வு ஆசிரியர் மூர்த்தி படுகாயம் அடைந்தார். இதுபோன்று அவ்வப்போது காட்டுமாடுகள் தாக்குவது தொடர்கிறது. மெத்தனப் போக்கில் செயல்படும் வனத்துறை காட்டுமாடு நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10 minutes ago
10 minutes ago
12 minutes ago