உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தத்தில் மீன்பிடி திருவிழா

நத்தத்தில் மீன்பிடி திருவிழா

நத்தம் : நத்தம் குட்டுப்பட்டி ஊராட்சி ஒத்தினிப்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாப்பன்குளம். இந்த குளத்தில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாப்பன்குளத்தில் நேற்று காலை மீன்பிடி திருவிழா நடந்தது. நத்தம், குட்டுப்பட்டி, செந்துறை, சிங்கம்புணரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளை பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். கட்லா, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை