பிளவர் சிட்டி மனைகள் விற்பனை துவக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் நிலக்கோட்டை கரும்பு சாலை ரோடு கொக்குப்பட்டி ரோடு அருகில் பிளவர் சிட்டி புதிய மனைகள் விற்பனை அறிமுக விழா நடந்தது.நிலக்கோட்டை செல்வம் கிளீனிக் மருத்துவர் செல்வராஜ் திறந்து வைத்தார். பாக்கியலட்சுமி மருத்துவமனை டாக்டர் கார்மேகம், பாண்டியராஜன், முத்து மருத்துவமனை டாக்டர் ஹரிஸ், அசோக் ஜூவல்லர்ஸ் அசோக் குத்து விளக்கேற்றினர். அரசன் ரியல் எஸ்டேட் மேலாண்மை இயக்குனர் சண்முகம் வரவேற்றார். கலந்து கொண்ட அனைவரும் மனைகளை பார்வையிட்டு முன்பதிவு செய்தனர். மனைகள் வாங்கியவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.நிலக்கோட்டை தி.மு.க.,கிழக்கு ஒன்றிய செயலாளர் மணி, பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, திருமண மஹால் சேகர், இளங்கோ, பத்திர எழுத்தர் நடராஜன், கீதா டிம்பர்ஸ் ரமேஷ் பட்டேல், சுப்பரமணி கலந்து கொண்டனர். ஓட்டல் சுவாகத் கிராண்ட் நிர்வாக இயக்குனர் அஸ்வின்குமார் நன்றி கூறினார்.