பூப்பல்லக்கு ஊர்வலம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில் திருவிழா அங்குள்ள பிருந்தாவன தோப்பிலிருந்து முளைப்பாரி அழைப்புடன் துவங்கியது.இைதயொட்டி கரகம் பாலித்தல் நடந்தது. பூசாரி அமாவாசை வாயில் அலகு குத்திய நிலையில , அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருள ஊர்வலம் நடந்தது .ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.