உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் தொட்டியில் குப்பை வீச்சு; விசாரணை

குடிநீர் தொட்டியில் குப்பை வீச்சு; விசாரணை

வடமதுரை : வடமதுரை அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் குப்பை வீசப்பட்ட சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.பாடியூர் ஊராட்சி கிரியம்பட்டியில் 10 ஆயிரம் லிட்டர் மேல் நிலைத் நீர்த் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை நடக்கிறது. குழாய்களில் துாசி கலந்த நீர் வந்ததையடுத்து கிராமத்தினர் தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதிகளவில் குப்பை மிதந்தது தெரிந்தது. யாரோ விஷமிகள் குப்பையை வீசியிருப்பது தெரிந்தது. ஊராட்சி தலைவர் சந்தோஸ்குமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் வடமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குப்பை வீசியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். ஒன்றிய கமிஷனர் முருகேசன், சுப்பிரமணி உத்தரவில் நீர்த்தொட்டியில் இருந்த நீர் முழுதும் அகற்றப்பட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பின் மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ