விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
ஆத்துார்: ''நீர்நிலை மேம்பாடு, வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது''என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ஆத்துார் மல்லையாபுரத்தில் கொம்பு அணை முதல் சீலையனகுளம் வரையிலான சாய்தள வடிகால், பாலம் பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: மழைக்காலங்களில் சேகரமாகும் மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் நீர் நிலைகள் துார்வாரப்பட்டு வருகின்றன. இப்பணியின் போது அள்ளப்படும் மண் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருகிறதுஅரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடியில் வசிக்கும் மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர்.