மேலும் செய்திகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
03-Feb-2025
கொடைக்கானல்: கொடைக்கானலில் தகிக்கும் வெயிலுக்கு மத்தியில் நேற்று குளுகுளு சீதோஷ்ண நிலையுடன் லேசான சாரல் மழை பெய்ததை பயணிகள் அனுபவித்தனர்.சுற்றுலா தலமான கொடைக்கானலில் சில தினங்களாக தரைப் பகுதிக்கு நிகராக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் வெயிலை சமாளிக்க குளுகுளு நகரான கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, வன சுற்றுலாதலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை ரசித்தனர்.ஏரியில் படகு, ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று காலை 11:00 மணி வரை வெயில் நீடித்த நிலையில் அதன் பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு காற்றில் ஈரப்பதம்அதிகரித்து சில்லெனமாறியது.தொடர்ந்து லேசான சாரல் பெய்தது. இதனால் ரம்யமான காலநிலை நிலவியது. திடீரென மாறிய சீதோஷ்ண நிலையால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
03-Feb-2025