மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
21-Feb-2025
வேடசந்துார் : திண்டுக்கல் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மிக மாநாடு ஏப்.27-ல் திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேடசந்துாரில் நடந்தது. மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார். அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் சிலைகளை மாவட்டத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று, பக்தர்களுக்கு காட்சி தர செய்வது, பங்கேற்கும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சிறப்பாக வரவேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோட்ட செயலாளர் ஜெயக்குமார்,பா.ஜ.,ஒன்றிய தலைவர் கோபால், நிர்வாகி பாலாஜி பங்கேற்றனர்.
21-Feb-2025