உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஸ்டேஷனில் திரண்ட ஹிந்து முன்னணியினர்

ஸ்டேஷனில் திரண்ட ஹிந்து முன்னணியினர்

பழநி : திண்டுக்கல் அபிராமி அம்மன் சிலையை கிராமப் பகுதிகளில் எடுத்து செல்ல அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது .இதற்கு அனுமதி மறுத்த நிலையில் பழநி டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் ஹிந்து முன்னணியினர் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் தலைமையில் முற்றுகையிட திரண்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் கூறியதாவது: அபிராமி அம்மனை வழிபட தடை விதித்துள்ளனர். தடை விதிக்க கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தால் அதனை பெற்றுக் கொள்ள எந்த அதிகாரியும் முன்வரவில்லை. இதை கண்டிக்கிறோம் என்றார். மதுரை கோட்டச் செயலாளர் பாலன், ஒன்றிய தலைவர் பத்ரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் இளம்பரிதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ