கூட்டுறவு கடன் ரூ.30 லட்சமாக உயர்வு: அமைச்சர் சக்கரபாணி
ஒட்டன்சத்திரம் : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ. 12 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக,'' உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் தொகுதி கரியாம்பட்டி, தொப்பம்பட்டி, மானுாரில் கூட்டுறவு கட்டடங்களுக்கு அடிக்கல் , தும்பலபட்டியில் கூட்டுறவு சங்க கட்டட நவீனமயமாக்கும் பணி , வாகரை, கீரனுார், கொழுமம் கொண்டான், தாழையூத்தில் கூட்டுறவு சங்கங்களை தொடங்கியும், சப்பளநாயக்கன் பட்டியில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது:பொது விநியோகத் திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள் வழங்க ரூ.10,500 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். மாவட்டத்தில் 45,145 விவசாயிகளுக்கு ரூ.525.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழு கடன் திட்டத்தில் 3793 குழுக்களை சேர்ந்த 34,833 பேருக்கு ரூ.87.66 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வைத்தார். ஆர்.டி.ஓ., சரவணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ், ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, துணைத்தலைவர் தங்கம், கூட்டுறவு இணைப்பதிவாளர் காந்தி நாதன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சுபாஷினி தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், சுப்பிரமணி கலந்து கொண்டனர்.