பசுமைக்கு வித்திடும் சர்வதேச லயன்ஸ்
கொடைக்கானல் சுற்றுப் பகுதிகளில் சோலை மரங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனர் சர்வதேச லயன்ஸ் அமைப்பினர். சர்வதேச லயன்ஸ் 324 தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் கொடைக்கானல், சுற்றிய பகுதிகளில் சோலை மரங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனர். இதோடு தமிழகம் முழுவதும் பல கோடி மரங்கள், பனை விதைகளும் வரும் ஆண்டுகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சோலை மரங்கள், பலன் தரும் மரங்கள் அடங்கும். 20 ஆண்டாக கொடைக்கானல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் லயன்ஸ் சங்கம் சார்பில் லட்சக்கணக்கான பலன் தரக்கூடிய மரங்களை நடவு செய்துள்ளனர். இதுதவிர பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, தண்ணீரின் அவசியம், அவற்றின் பாதுகாப்பு முறைகள், மழை நீர் சேகரிப்பு அமைப்பு, தமிழக நதிகளை இணைக்கும் திட்டம், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், பார்த்தினிய செடிகள் அகற்றுதல், கொடைக்கானல் நகரில் ஆனந்தகிரி 5, 6 வது தெரு, சன் கார்னரில் 3 கிணறு வெட்டி அதன் மூலம் சுகாதாரமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்தி உள்ளனர். ஆர் வ மா க செய்கிறேன்
டி.பி.ரவீந்திரன், 324பி லயன்ஸ் மாவட்ட கவர்னர், கொடைக்கானல்: சிறு வயது முதலே மரம் வளர்ப்பு, இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறேன். 20 ஆண்டாக கொடைக்கானலை சுற்றிய பகுதிகளில் அந்நிய மரங்களுக்கு மத்தியில் சோலை மரங்களை உருவாக்கி வருகிறேன். பொது மக்களிடம் வீடுகள் முன் குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்து அவை தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது. கொடைக்கானல் மட்டுமல்லாது பிற மாவட்டங்களும் பசுமையாக காட்சியளிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு துாய்மையான காற்று, இயற்கை சுற்றுச்சூழல், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்றார்.