உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

ரெட்டியார்சத்திரம்: மங்களப்புள்ளி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில், 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. தாடிக்கொம்பு ஜி.கோவில்பட்டி மங்களப்புள்ளியில், மங்களவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. கர்நாடக சாளுக்கிய மன்னர்களால், இக்கோயில் உள்பட 7 இடங்களில் பெருமாள் கோயில்கள் கட்டப்பட்டன. ஹிந்து அறநிலையத்துறை அனுமதியுடன் புனரமைப்பு பணிகள் துவங்கின. உபயதாரர்கள் உதவியுடன், கருங்கற்களால் ஆன சிற்ப வேலைப்பாடுகள், இக்கோயிலில் புதிதாக நரசிம்மருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக யாகசாலை வேள்விகள், துவங்கியது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பழநி ஐ.பி.செந்தில்குமார், வேடசந்துார் காந்திராஜன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றனர். நேற்று 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் வெள்ளிமலை, ரெட்டியார்சத்திரம் சிவகுருசாமி, மணி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி, திண்டுக்கல் ஒன்றிய முன்னாள் செயலாளர் பெருமாள்சாமி பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள் வாசுதேவன், ராமானுஜம், சுசீலா, பிரபாகரன், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், உதவி ஆணையர் லட்சுமிமாலா, ஆய்வாளர் காசிமணிகண்டன், செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ