உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம், ஆண்டிபட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

நத்தம், ஆண்டிபட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

நத்தம் : -நத்தம் வேலம்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இவ்விழாவையொட்டி மஹா கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, கோமாதா பூஜை, தத் வார்த்த ஹோமம், முளைப்பாரி அழைப்பு, தீபாராதனை,முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 2ம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேஸ்வரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூஜை மலர்கள்,புனித தீர்த்தம்,அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்பன் யாத்திரை குழு நிர்வாகிகள் செய்திருந்தனர். வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டியில் ஸ்ரீபாலவிநாயகர், பேசும்பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர்கள் ஜெகநாதன், சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஸ்ரீபேசும் பாலமுருகன் மட ஆலயம் அறக்கட்டளை நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை