உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மங்களப்புள்ளி நரசிங்க பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

மங்களப்புள்ளி நரசிங்க பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் அருகே மங்களப்புள்ளி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது.தாடிக்கொம்பு- இடையகோட்டை ரோட்டில் உள்ள கோவில்பட்டி மங்களப்புள்ளியில் மங்களவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூமாதேவி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் விஜய நகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலின் உப கோயிலாகும். இங்கு 77 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.ஆந்திர மாநிலம் அகோபிலத்திற்கு அடுத்ததாக நரசிம்மர் சாந்த ரூபத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாளாகவும் இங்கு அவதரித்திருப்பது விசேஷம். மேற்கு திசை நோக்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் தனி சன்னிதியிலும், மங்களவள்ளி தாயார், ஆண்டாள், கருடாழ்வார் சன்னிதிகளும் உள்ளன. இங்கு இன்று காலை 6:00 முதல் 8:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சேகர் பாபு, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், எம்.பி., சச்சிதானந்தம் கலெக்டர் சரவணன் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள் வாசுதேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை