உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன வரலாற்று பதிவுகள் கொண்டுள்ள இலக்கியங்கள் காந்திகிராம பல்கலை கருத்தரங்கில் தகவல்

இன வரலாற்று பதிவுகள் கொண்டுள்ள இலக்கியங்கள் காந்திகிராம பல்கலை கருத்தரங்கில் தகவல்

சின்னாளபட்டி : '' ஒரு இனத்தின் வரலாறு அவ்வின இலக்கியத்தில் பதிவாகி இருக்கும் '' என எழுத்தாளர் மாத்தளை சோமு பேசினார்.காந்திகிராம பல்கலையில் தமிழ்த்துறை சார்பில் மலையக மக்கள் பண்பாடும் இலக்கியமும் குறித்த பன்னாட்டு கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது: ஒரு இனத்தின் வரலாறு அவ்வின இலக்கியத்தில் பதிவாகி இருக்கும். மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாறு மலையக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.துணைவேந்தர் பஞ்சநதம் பேசுகையில்,'' மலையக மக்களின் வாழ்வியல், பண்பாடு குறித்து மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்காக இலங்கை பல்கலை, பாடசாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ''என்றார்.தமிழ்த்துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். இந்திய மொழிகள் புல தலைவர் முத்தையா, மலையக தாயகம் திரும்பிய தமிழர் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கந்தையா பேசினர்.இலங்கை கிழக்கு பல்கலை கவுரீஸ்வரன், ஆய்வாளர்கள் அருணாசலம், லெட்சுமணன், வேலாயுதம், ராமர், கவிஞர் பேனா மனோகரன், பேராசிரியர்கள் கிறிஸ்டோபர், பாண்டி உள்ளிட்டோர் கட்டுரைகள் வழங்கினர்.நுண்கலை துறை பேராசிரியர் கேசவராஜராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை