மருத்துவ முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் ஸ்கின் டெஸ்ட் பரிசோதனை முகாம் நடந்தது. டீன் சுகந்திராஜகுமாரி தலைமை வகித்தார். மாவட்ட காசநோய் துணை இயக்குநர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.