தனியார் மருத்துவமனையில் ஜப்தி செய்ய வந்த நகராட்சி
பழநி: பழநி திண்டுக்கல் ரோட்டில் உள்ள பிரபல கருத்தரித்தல் மைய மருத்துவமனையில் பல ஆண்டுகளாக சொத்து வரி குடிநீர் வரி கட்டாததால் ஜப்தி செய்ய நகராட்சி அதிகாரிகள் வருந்தனர்.பழநி திண்டுக்கல் ரோட்டில் பிரபல கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. 2017 முதல் சொத்து வரி, குடிநீர் வரி ரூ. 70 லட்சம் செலுத்தாததால் நகராட்சியினர் பலமுறை வரியை கட்ட கோரினர். பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். இதை தொடர்ந்து நேற்று நகராட்சி பொறியாளர் ராஜவேலு தலைமையில் அதிகாரிகள் ,பணியாளர்கள் மருத்துவமனை பொருட்களை ஜப்தி செய்ய குவிந்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சொத்து வரியை செலுத்துவதாக உறுதி அளித்ததின் பேரில் திரும்பினர்.