உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இளைஞர்கள் மனதில் முருக கோட்பாடுகள்: சக்கரபாணி

இளைஞர்கள் மனதில் முருக கோட்பாடுகள்: சக்கரபாணி

பழநி: ''முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம் முருக கோட்பாடுகளை இளைஞர்கள் மனதில் நிறுத்துவதுதான்'' என அமைச்சர் சக்கரபாணி பேசினார். பழநியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய அவர் பேசியதாவது:மாநாட்டின் நோக்கம் முருக வழிபாட்டின் உள்ளார்ந்த நெறிமுறைகளை உலகெங்கிலும் பரப்புதல், முருகன் தத்துவக் கோட்பாடுகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக எடுத்துரைத்தல், முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி முருக அடியார்களை ஒன்றிணைப்பது, முருகன் புகழ் பாடும் புராணங்கள், திருப்புகழ், இலக்கியங்கள் போன்றவற்றை உலகம் அறிய செய்தல், இளைஞர்கள் முருக கோட்பாடுகளை மனதில் நிறுத்த வேண்டும் உலகெங்கும் வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றார்.திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் பேசுகையில்; முருகன் மாநாடு பல்வேறு சமயத்தினரையும், இனத்தினரையும் ஒன்றிணைக்கும் சமத்துவ மாநாடாக அமைந்திருக்கிறது என்றார்.பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசுகையில்; பழநியில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 24 மாதங்கள் மருத்துவமனை செயல்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசின் அனுமதி கிடைக்கும்.அதனை கருத்தில் கொண்டே பழநியில் சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. 24 மாதங்கள் பூர்த்தி ஆனவுடன் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான பணிகளை அரசு நிறைவேற்றித் தரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ