உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இயற்கை உணவு கண்காட்சி

இயற்கை உணவு கண்காட்சி

சின்னாளபட்டி, : காந்திகிராம பல்கலை.,வேளாண் துறை மாணவர்கள் சார்பில் இயற்கை உணவுப் பொருள் கண்காட்சி நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பிரியங்கா, ராஜகுரு முன்னிலை வகித்தனர். முதல்வர் சுந்தரம் மாதிரி வரவேற்றார். பலாப்பழ குக்கீஸ், வெற்றிலை அல்வா, கொள்ளுமிட்டாய் என 14 வகை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் வைக்கப்பட்டது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை அப்படியே பயன்படுத்துவதை விட, சமைத்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ