உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆற்றுப்படை மாநாடு: நீதிபதி சுரேஷ்குமார்

ஆற்றுப்படை மாநாடு: நீதிபதி சுரேஷ்குமார்

பழநி: ''முத்தமிழ் முருகன் மாநாட்டை முத்தமிழ் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்'' என உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.பழநியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2ம் நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழ் ஆன்மிக மாநாடாக அதிலும் முருகப்பெருமானுடைய பெயரை தாங்கி நடத்துகின்ற ஒரு பெரும் மாநாடாக உலக அளவில் முதன் முறையாக நடைபெறுகின்ற மாநாடு இதுதான். இறையை உணர்ந்து, தமிழை அறிந்து, உணர்ந்து, முருகனை அறிந்து, முருகனின் வீர பராக்கிரமங்களை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தி உள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டிற்குரியது.36 இலக்கியங்களைக் கொண்ட சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு தான் மிக மூத்த இலக்கியமாக உள்ளது. அந்த பத்துப்பாட்டில் முதன்மை பாட்டாக வைக்கப்பட்டுள்ளது திருமுருகாற்றுப்படை. இந்த மாநாட்டை உலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்லுவதற்கு பதிலாக உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு உன்னதமான நிகழ்வை தமிழ் மண்ணிலே இன்றைக்கு அரங்கேற்றி இருக்கின்ற அரசை பாராட்டுகிறேன். அறநிலையத்துறையை பாராட்டுகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ