உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டு எண்ணிக்கை; 408 பணியாளர்கள் தேர்வு

ஓட்டு எண்ணிக்கை; 408 பணியாளர்கள் தேர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் தொகுதி ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ரெட்டியார் சத்திரம் அண்ணா பல்கலை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கை பணியில் ஈடுபடும் பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது. கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இதில் டி.ஆர்.ஓ., சேக் முகையதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.6 சட்டசபை தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள் என 84 மேஜைகள் , 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண்பார்வையாளர்கள் 102, கண்காணிப்பாளர்கள் 102, உதவியாளர்கள் 102, அலுவலக உதவியாளர்கள் 102 என 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாளை ( மே 22) - நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்