மேலும் செய்திகள்
மங்களக்குடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா
13-Feb-2025
திண்டுக்கல்: சிறுமலையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியும் நிலையில் அவர்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த சிறுமலையில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல்லிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள சிறுமலையில் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் தங்க காட்டேஜ்களும் உள்ளன. சிறுமலை நுழையும் பகுதியில் வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிப்பதற்காக செக்போஸ்ட் வைத்துள்ளனர். அதை கடந்து உள்ளே செல்லும் பயணிகளை கண்டு கொள்வதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பதால் அவரவர் விரும்பிய இடங்களில் நின்று செல்பி எடுப்பது. மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் அசாம்பாவித சம்பவங்களும் நடக்கின்றன. பிரச்னைகள் தொடர்பாக 20 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள தாலுகா போலீசார் தான் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இங்கு நடக்கும் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கும் வகையில் சிறுமலையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் கூறியதாவது: சிறுமலை பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.
13-Feb-2025