உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் கம்யூ., எம்.பி., சர்ச்சை பேச்சு ஹிந்து தமிழர் கட்சி, பா.ஜ., கண்டனம்

பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் கம்யூ., எம்.பி., சர்ச்சை பேச்சு ஹிந்து தமிழர் கட்சி, பா.ஜ., கண்டனம்

பழநி: பழநி முருகன் மாநாட்டில் கம்யூ., எம்.பி., சச்சிதானந்தம் 'முருகன் கோயில் பின்புறம் முஸ்லிம்கள் வழிபாடு செய்கின்றனர்' என பேசியதற்கு 'இல்லாத ஒன்றை ஆவணப்படுத்த முயற்சிக்கிறார்' என ஹிந்து தமிழர் கட்சி, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளன.பழநியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் பேசும்போது, 'பழநி முருகன் கருவறைக்கு பின்புறம் முஸ்லிம்கள் வழிபாடு நடத்துகின்றனர்' என பேசினார்.ஹிந்துக்கள் மட்டுமே மலைக்கு செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் எம்.பி.,யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை : மாநாட்டில் பழநி முருகன் கோயில் பின்புறம் முஸ்லிம்கள் வழிபாடு செய்கின்றனர் என இல்லாத ஒன்றை கம்யூ., எம்.பி., பேசியுள்ளார்.அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, ஆதினப் பெருமக்கள்முன்னிலையில் இல்லாத ஒன்றைபேசிஆவணப்படுத்த முயற்சித்திருக்கிறார். இந்த பேச்சின் மூலம் இவர்களின் நோக்கம் தெரிகிறது.அவர் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். பழநி கோயில் நிர்வாகம் அவர் மீது புகார் தெரிவித்து உரிய விளக்கமும் மறுப்பும் அளிக்க வேண்டும்.ஹிந்துக்கள் மட்டுமே பழநி மலைக்கு செல்ல முடியும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எம்.பி., இப்படி பேசியுள்ளார்.தனது பேச்சுக்கு எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும், கருத்தை வாபஸ் பெற வேண்டும். ஹிந்து அறநிலையத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ., எதிர்ப்பு

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.,தலைவர் கனகராஜ் அறிக்கை: இல்லாத ஒன்றை இருப்பதாக எம்.பி.,பேசி உள்ளார். மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் பலரது நெற்றியிலும் விபூதி உட்பட ஆன்மிக சின்னங்கள் இல்லை.இதை வன்மையாக கண்டிக்கிறோம், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMESH
ஆக 27, 2024 10:07

ஓட்டு ஓட்டு ஓட்டு....இது ஒன்றே குறிக்கோளாக இருக்கும் திராவிட மாடல் கொத்தடிமை கூட்டம்


Selvaraj Mannar
ஆக 27, 2024 09:27

தமிழகத்தில் நடைபெறுவதுஇந்துக்களுக்கு எதிரான அரசு அவர்களின் கூட்டாளிகளும் அப்படித்தான் இருப்பார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை