பழநி கோயில் பொறியாளர் சஸ்பெண்ட்
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே திருமண மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கான இறுதி நிலுவை தொகை வழங்குதல் தொடர்பாக ஊரக செயற்பொறியாளர் பிரேம்குமார் லஞ்ச வழக்கில் கைதானதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கோயில் இளநிலை பொறியாளர் முத்துராஜா 43, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.