உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை

பழநி முருகன் கோயிலுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சீர்வரிசையாக பல்வேறு பொருட்களை குறவர் இன மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா பிப்., 14 ல் நிறைவுற்றது. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.நேற்று திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறவர் இன மக்கள், வள்ளிக்கு சீர்வரிசையாக வழங்க தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பொருட்களை பாரம்பரிய முறையில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இவர்களுடன் கேரளாவை சேர்ந்தவர்களும் வந்தனர். சிலர் காவடி எடுத்து, அலகு குத்தியும் வந்தனர்.பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில் பாத விநாயகர் கோயில் வரும் வரை பலர் வேலன் ஆட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆடினர். பாத விநாயகர் கோயிலில் வழிபாடு முடித்து முருகன் கோயில் சென்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ