உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டி, டிங்கரிங்கில் சர்வீஸ் ரோடு; அவசரகோலத்தில் முடிந்த பணி

பட்டி, டிங்கரிங்கில் சர்வீஸ் ரோடு; அவசரகோலத்தில் முடிந்த பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் - திருச்சி மேம்பால சர்வீஸ் ரோட்டில் தினமலர் செய்தியை தொடர்ந்து அவசர அவசரமாக போடப்பட்ட ரோடானது பட்டி, டிங்கரிங் பார்த்த வாகனம் போல் பரிதாபமாக காட்சியளித்தது.திண்டுக்கல் - திருச்சி மேம்பாலத்திற்கு அடியில் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த பாதையானது இ.பி.அலுவலகம், திருச்சி, கரூர் ரோடு இணைப்பு ஜி.டி.என்.சாலை, இரண்டு மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட பல முக்கிய வழித்தடமாக உள்ளது. பல மாதங்களாக இந்த பாதையானது குண்டும், குழியுமாக இருந்து வந்ததால் அடிக்கடி விபத்து நடந்தது.மழை காலத்தில் ஆங்காங்கே நீர் தேங்கி குட்டைகளாக காட்சியளிக்கும். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாகும் போது கடமைக்கு ஆங்காங்கு பேட்ஜ் ஒர்க் நடந்து வந்தது. இது தொடர்பாக ஏப்.26ல் தினமலர் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியாக நேற்று (ஏப்.30) அவசர அவசரமாக ரோடுகள் போட ரோடு இயந்திர வாகன அணிவகுப்புகள் நடந்தன.சர்வீஸ் ரோட்டிற்கு விடிவு காலம் பிறந்தாச்சு என பொதுமக்களும், வியாபாரிகளும் பெருமூச்சு விடுவதற்குள் ரோட்டிலுள்ள பள்ளங்களை மட்டுமே ஜல்லிகற்கள், தார்களை கொண்டு நிரப்பி அரை மணி நேரத்திற்குள் ரோடு பணி கடமையை முடித்து விட்டு சென்றனர்.தொலைவில் இருந்து பார்த்தால் பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்ட வாகனம் போல் இந்த ரோடு ஆங்காங்கே பூச்சு வேலையில் பரிதாபமாக தெரிந்தது. இப்படியாக பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்ட ரோடுகள் சிறுமழை பெய்தாலும் தாக்குப்பிடிக்காது என புலம்பியபடியே வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ