மேலும் செய்திகள்
நலப்பணி திட்ட முகாம்
30-Sep-2026
திண்டுக்கல், செப்.25- திண்டுக்கல் எம்.வி.,முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடந்தது. முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் சண்முகவேல் மாணவர்களின் சிறப்பையும், நாட்டு நலப்பணி திட்டத்தின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார் வழிகாட்டுதலில் டாக்டர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன் ஆகியோர் உடல் நலம், மனநலம், உணவே மருந்து தலைப்புகளில் பேசினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சண்முகப்பிரியா, ராஜலெட்சுமி, விஷ்ணுப்ரியா, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
30-Sep-2026