பூட்டிய வீடுகளில் நகை, பணம் கொள்ளை
கோபால்பட்டி : நத்தம் அருகே கோபால்பட்டியில் பூட்டிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் ,பணம், டூவீலர்களை கொள்ளையடித்து சென்ற கும்பலை சாணார்பட்டி போலீசார் தேடுகின்றனர்.கோபால்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் ஜோதி மணிகண்டன் 37. இவர் சென்னையில் வேலை பார்ப்பதால் வீடு பூட்டிருந்தது.அதே பகுதி முனீஸ்வரி 58, இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பூட்டியிருந்த இந்த இரு வீட்டின் கதவை உடைத்த கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.மகாலட்சுமி நகரில் மணிகண்டன் 42, திண்டுக்கல்லில் வசித்து வரும் நிலையில் இவரது வீட்டின் கதவை உடைத்து ரூ. 25000,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். மகாலட்சுமி நகரில் பூட்டிருந்த விஜயராமன் 70, விஜயகுமார் 32, வீட்டில் நிறுத்தியிருந்த இரு டூவீலர்களையும் எடுத்து சென்றனர். சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, எஸ்.ஐ., பரமசாமி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் இதே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் போலீஸ் ரோந்து பணி முற்றிலும் இல்லாத நிலையில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் நடப்பதாகவும்,இதில் ஈடுபடுவோர் நைட்டி அணிந்தப்படி கொள்ளையடித்து செல்வதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.