உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல், ஆக.6- தமிழக ஆதித்தமிழர் துாய்மைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள  வேலைநிறுத்த போராட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று நடந்தது. மாநில தலைவர் காளிராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாநகராட்சி  துாய்மைப்பணிக்கு தனியார் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து விட்டு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது. துாய்மைப் பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ