மரக்கன்றுகள் நடும் விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி சுற்றுச் சூழல் கழகம் சார்பில் திண்டுக்கல் ரெங்கநாதபுரம் அரசு துவக்கப்பள்ளியில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் ரெத்தினம்,இயக்குனர் துரை ரெத்தினம் வழிகாட்டுதலில் முதல்வர் சரவணன் ஆலோசனையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுற்று சூழல் கழக இணை ஒருங்கிணைப்பாளர்கள் அருண், ராஜா முன்னிலை வகித்தனர்.