உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சொட்டு நீர் பாசனத்தில் மரக்கன்று

சொட்டு நீர் பாசனத்தில் மரக்கன்று

வேடசந்துார் : கல்வார்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரங்கநாதபுரம் கால்நடை மருந்தக மைதானத்தில் வேம்பு, நாவல், புங்கை, கொடுக்காப்புளி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா துவங்கியது.ஊராட்சி தலைவர் சுகுணா தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். கால்நடை மருந்தக டாக்டர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சிப் பகுதி முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நட உள்ளதால் மரக்கன்றுகளை நட்டு அதன் அருகிலே ஒரு பிளாஸ்டிக் குடத்தையும் பதித்து விடுகின்றனர். அந்த குடத்தின் அடி பகுதியில் சிறு ஓட்டையிட்டு அதை விளக்கு திரி போன்ற துணியால் அடைத்து சொட்டு நீர் பாசனமாக பாய்ச்சுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை