உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரிபணம் 4.66 கோடி கையாடல் வழக்கில் சரவணன் கணினியை கைப்பற்றி விசாரணை

வரிபணம் 4.66 கோடி கையாடல் வழக்கில் சரவணன் கணினியை கைப்பற்றி விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் செய்த வழக்கில் கைதான சரவணன் பயன்படுத்திய கணினியை போலீசார் விசாரணைக்கு எடுத்து சென்றனர்.திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய நெட்டுத்தெருவை சேர்ந்த சரவணன் 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4.66 கோடி கையாடல் செய்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி அலுவலக கணக்கு பிரிவில் பணியாற்றும் அலுவலர்களையும் விசாரித்தனர்.முழுவிபரங்களும் சரவணன் பயன்படுத்திய கணினியில் இருப்பதால் போலீசார் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து கணினியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை