மேலும் செய்திகள்
குலதெய்வ கோயில்களில் இரவு சிவராத்திரி வழிபாடு
27-Feb-2025
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் விடிய, விடிய பங்கேற்று தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு ரத வீதி சிவன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில்களில் சிவன், நந்திக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கி இன்று காலை 5:00 மணி வரை நான்கு கால பூஜைகள், சிறப்பு யாகம் நடந்தது. பக்தர்கள் விடிய, விடிய நடந்த அலங்கார பூஜையில் பங்கேற்றனர். மணிக்கூண்டு வெள்ளை விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். கிராமங்களின் பல பகுதிகளில் குலதெய்வ கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தி வழிபட்டனர். அனைத்து சிவாலய லிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்றனர்.நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு 16 வகையான அபிஷேகங்கம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நான்கு கால விசேஷ யாக பூஜை, மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். குட்டூர் அண்ணாமலையார் கோயில், முப்புலிகருப்பு கோயிலிலும் சிறப்பு பூஜை , யாகம் நடந்தது.
27-Feb-2025