உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 44,307 மாணவர்களுக்கு திறன் பயிற்சி; கலெக்டர் பூங்கொடி

44,307 மாணவர்களுக்கு திறன் பயிற்சி; கலெக்டர் பூங்கொடி

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022---23 கல்வியாண்டு முதல் தற்போது வரை 44,307 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக,'' கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்வுக்குபடி எனும் திட்டத்தின் வாயிலாக உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்பினை பெற்ற கல்லுாரி மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பத்தினை வழங்கிய அவர் பேசியதாவது : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2022--23 ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை 44,307 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உயர் கல்வியில் சேராதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் , தேர்வுக்கு வராத மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதற்காக உயர்வுக்குப்படி என்ற முகாம் துவக்கப்பட்டது. அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக 948 மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி