மேலும் செய்திகள்
என்.பி.ஆர்.,ல் தடகள போட்டி
03-Aug-2024
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா போட்டிகள் நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி ,சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 41 பள்ளிகளை சேர்ந்த 3500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, நடனம், கட்டுரை , ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, வண்ணக் கோலப்போட்டி நடைபெற்றது.11,12ம் வகுப்புகளுக்கான பிரிவில் 160 புள்ளிகளை பெற்றும், 9 ,10 வகுப்பு பிரிவில் மதுரை புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளி ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. 150 புள்ளிகளைப் பெற்று மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. 100 புள்ளிகளைப் பெற்று திண்டுக்கல் புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.என்.பி.ஆர்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன், என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி கல்வி இயக்குனர் கார்த்திகை பாண்டியன் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன்,பல்தொழில் நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி, என்.பி.ஆர்., கல்விக்குழும நிர்வாக மேலாளர் கவுரி ,கல்விக்குழும தொடர்பு அதிகாரி தேவி பரிசு வழங்கினார்.
03-Aug-2024