உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர் சங்கத்தினர் மறியல்: 20 பேர் கைது

மாணவர் சங்கத்தினர் மறியல்: 20 பேர் கைது

திண்டுக்கல், ஜுலை 22 -திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த இப்போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நிருபன் தலைமை வகித்தார். நிர்வாகி துர்காதேவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித், மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர். போராடிய மாணவர்கள், வாலிபர்கள் எழுந்து செல்லாத நிலையில் 20 பேரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !