உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது

ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது

குஜிலியம்பாறை : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா கேட்டு மனு செய்த பெண்ணிடம் ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கரிக்காலி சர்வேயர் பாரதிதாசன் 37, அவரது உதவியாளர் சுதா கைது செய்யப்பட்டனர்.குஜிலியம்பாறை கன்னிமேக்கிபட்டி அர்ஜூன்ராஜா மனைவி சரண்யா 35. அவரது தந்தை கல்யாண கோனார், சித்தப்பா துரைசாமிக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் தந்தைக்குரிய 75 சென்ட் நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா தரும்படி குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் சரண்யா மனு செய்தார்.நிலத்தை அளந்து பட்டா போட்டு கொடுக்க சர்வேயர் பாரதிதாசன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத சரண்யா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீசார் அளித்த அறிவுரையின்படி சரண்யா வி.ஏ.ஓ., அலுவலக தற்காலிக பெண் பணியாளரும், சர்வேயர் உதவியாளருமான சுதாவிடம் கொடுத்தார். பிறகு அங்கு வந்த சர்வேயர் பாரதிதாசன் அப்பணத்தை பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் மற்றும் போலீசார் சர்வேயர், அவரது உதவியாளரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P VIJAYAKUMAR
செப் 05, 2024 11:06

Urapakkam Panchayat office staffs are asked extra money Rs.5000/- for New Property Tax bills. In online service is not available for first property tax bills. Here temporary staffs are working i computerized bills and she asked to extra money for as usual to all peoples and this money for giving payment to temporary staffs.


புதிய வீடியோ